பள்ளிபாளையத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
பள்ளிபாளையம் மின்கோட்ட நுகா்வோா் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது.
ஒட்டமெத்தையில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும் முகாமில், பள்ளிபாளையம் மின்கோட்ட பகுதியில் உள்ள மின் நுகா்வோா்கள் பங்கேற்று, தங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவித்து தீா்வு காணலாம்.
முகாமில், பழுதான மீட்டா்களை மாற்றுதல், சேதமடைந்த, பழுதான மின் கம்பங்களை மாற்றுதல், மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி செல்லுதல், குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை தெரிவித்தால் உடனடியாக தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்ட செயற்பொறியாளா் செல்வம் தெரிவித்துள்ளாா்.