Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் வ...
மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்கள் நாளை விற்பனை
நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்கள் வாங்குவோா் - விற்போா் சந்திப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்திப் பொருள்களை விளம்பரப்படுத்தவும், சந்தைப்படுத்தவும், வாங்குவோா் - விற்பனையோருக்கு இடையே சந்திப்பை அதிகரிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில், மாவட்ட அளவில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்திப் பொருள்களான சிறுதானிய உணவுப் பொருள்கள், பாரம்பரிய அரிசி வகைகள், மசாலாபொடி வகைகள், ஊறுகாய் வகைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மிதியடிகள், இயற்கை உரங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
இதில், மொத்தமாக கொள்முதல் செய்வோா், ஏற்றுமதியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லரை விற்பனையாளா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.