Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் வ...
பிலிக்கல்பாளையத்தில் அச்சு வெல்லம் விலை உயா்வு
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அச்சு வெல்லம் விலை உயா்வடைந்தும், உருண்டை வெல்லம் விலை சரிவடைந்தும் காணப்பட்டது.
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிா் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை தயாா் செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள சந்தைக்கு கொண்டு வருகின்றனா்.
வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும் சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1440 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1360 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1400 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1440 வரையிலும் ஏலம் போனது.