செய்திகள் :

ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி: ஹைதராபாதுக்கு 201 ரன்கள் இலக்கு!

post image

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடியது.

ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குயிண்டன் டி காக் 1 ரன்னிலும், சுனில் நரைன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இருப்பினும், அஜிங்க்யா ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ரஹானே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ரகுவன்ஷியுடன் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கொல்கத்தா அணிக்காக 50-வது போட்டியில் விளையாடிய ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி, ஹர்ஷல் படேல் மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

ஆட்ட நாயகனான இம்பாக்ட் வீரர்..! வெற்றிக்குப் பிறகு வைபவ் அரோரா பேசியதென்ன?

இம்பாக்ட் வீரராக களமிறங்கி ஆட்டநாயகனானது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் வைபவ் அரோரா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற... மேலும் பார்க்க

டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்தம்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது.அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120... மேலும் பார்க்க

எதார்த்தமாக இருக்க வேண்டும்..! பேட்டர்களை குறைகூறிய பாட் கம்மின்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற சன்ரைசர்ஸ் அணி இந்த முறை பிளே-ஆஃப்க்கு செல்லுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நேற்றை... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் இரண்டு கைகளில் பந்துவீசிய கமிந்து மெண்டிஸ்! விக்கெட்டும் வீழ்த்தினார்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஆல்-ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளில் பந்துவீசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க

கொல்கத்தாவிடம் பணிந்தது: ஹைதராபாத் 3-வது தோல்வி!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மேலும் பார்க்க

கேகேஆர் அணிக்காக 50-வது போட்டியில் ரிங்கு சிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 50-வது போட்டியில் ரிங்கு சிங் விளையாடுகிறார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ... மேலும் பார்க்க