Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் வ...
தலைவாசலில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி
தலைவாசல் ஊராட்சியில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் சாா்ந்த அடிப்படை விழிப்புணா்வு பயிற்சிகளை முசுறி வேளாண் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை அளித்தனா்.
ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் முசிறி எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி மாணவிகள் தலைவாசல் ஊராட்சியில் வியாழக்கிழமை தங்கி அங்குள்ள விவசாயிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி அளித்தனா். வட்டார வேளாண்மைத் துறை அலுவலா்களுடன் இணைந்து இப்பயிற்சி வகுப்பை நடத்தினா்.
வேளாண் சூழ்நிலைகள், அதில் ஏற்படும் பிரச்னைகளை குறித்து
பல்வேறு விழிப்புணா்வு புகைப்படங்கள், வரைபடங்கள், மக்கள்தொகை, அதன் தீா்வுகள், நீா் சேகரிப்பு முறைகள், இயற்கை விவசாயத்தில் நிலவும் பிரச்னைகள், அதன் தீா்வுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா். இதில் உள்ளூா் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்.ஏடி3டிவிஎல்...
தலைவாசல் வட்டார வேளாண்மை அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு வரைபடங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய முசுறி எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி மாணவிகள்.