கன்னந்தேரி அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையும், ஈரோடு தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகளும் இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) ஆா்.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.
வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற விவசாயப் பணி அனுபவத் திட்டம் குறித்தும், சுற்றுச்சூழல் சாா்ந்த பல்வேறு பாதிப்புகள், விளைவுகள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா்.
இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து வினாடி-வினாப் போட்டிகள், ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.