டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
Coolie Update: கூலி ரிலீஸ் தேதி அறிவிப்பு; இந்த தேதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா?
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது.
ஷூட்டிங் முடிந்தவுடன் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கேக் கட்டிங் தருணமும் நடந்திருந்தது. அந்தப் புகைப்படங்களையும் படக்குழுவினர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.

`லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
`மாஸ்டர்', `விக்ரம்', `லியோ' படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்திருக்கிறார்.
படத்தின் ரிலீஸ் குறித்தான எதிர்பார்ப்பு பரபரப்பாக இருந்த நிலையில் தற்போது படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ரஜினியின் முதல் திரைப்படமான `அபூர்வ சகோதரர்கள்' திரைப்படமும் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் வெளியாகியிருந்தது.
இந்த வருடம் சினிமாவில் தனது 50வது ஆண்டை கடக்கவிருக்கிறார் ரஜினி. இதனை முன்னிட்டு `கூலி' திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

ரஜினியைத் தாண்டி டோலிவுட்டிலிருந்து நாகர்ஜூனா, சாண்டில்வுட்டிலிருந்து உபேந்திரா, மாலிவுட்டிலிருந்து செளபின் சாஹிர் எனப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்களும் இருப்பதால் படத்தில் ரிலீஸ் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே தேதியில் ஹ்ருதிக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருக்கும் `வார் 2' திரைப்படமும் வெளியாகவிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃப்லிம்ஸ் அறிவித்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...