Vikram: ``வாழ்க்கையில் எவ்வளோ பிரச்னை..!" - வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்!
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம்.
ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் ரிலீஸாகும் சமயத்தில் சில சிக்கல்கள் இருந்ததால், ரிலீஸ் தாமதமாகி (மார்ச் 27) மாலை படம் திரைக்கு வந்தது. இதனால் படம் ரிலீஸ் ஆனதை தெரிவிக்கும் வகையிலும், ரசிகர்களின் கவனம் ஈர்ப்பதற்காகவும் விக்ரம் தமிழ்நாடெங்கும் பல ஊர்களின் தியேட்டருக்கு விசிட் அடித்து வந்தார். படத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்புக் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் நடிகர் விக்ரம், " 'ஒரே ஒரு வாழ்க்க அத வரலாறா வாழ்ந்துடணும்னு' டையலாக் சொல்லியிருப்பேன். ஆனால், இந்த வாழ்க்கை இருக்கே, ஹப்பா...எப்போதும் எதாவது பிரச்னை வந்து தூக்கி வீசுது. நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
இப்பகூட 'வீர தீர சூரன்' பட ரிலீஸ் பிரச்னை. படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடி படம் பார்த்தவர்கள் எல்லாம், 'படம் சூப்பரா இருக்கு, வித்தியாசமான, பயங்கரமான ஆக்ஷன் படமா இருக்கு. பெரிய மெஹா ஹிட். இந்த வருஷத்தோட மிகப்பெரிய படம்' என நிறைய பேர் பாராட்டுனாங்க.
#ChiyaanVikram reminisces the journey of #VeeraDheeraSooran and extends heartfelt thanks to the audiences for the love shown towards the blockbuster ❤️@chiyaan@sooriaruna@proyuvraaj@Kalaiazhagan15@mugeshsharmaapic.twitter.com/Ia1ILXGiXK
— Chiyaan Vikram Fans (@chiyaanCVF) April 4, 2025
ஆனால், தீடீர்னு உயர் நீதிமன்றம் படம் நான்கு வாரத்துக்கு ரிலீஸாக தடை விதிச்சது. அதையும் சமாளிச்சு, முதல் இரண்டு ஷோ ரிலீஸாகமல், மாலையில் படம் ரிலீஸாகுச்சு. முதல் ஷோ ரிலீஸ் ஆகல்ல அப்டினாலே, அந்தப் படம் முடிஞ்சது, அவ்வளவுதானு சொல்லுவாங்க. ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், மாலையில் ரீலீஸானபோது ரசிகர்கள் ஆதரவு கொடுத்து படத்தை பார்த்தாங்க.
ரசிகர்கள், குடும்பங்கள் என எல்லாரும் நல்லா பாராட்டுனாங்க. படத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்ப்புக் கிடைக்க ஆரம்பிச்சது. இப்போ படம் வெற்றியை நோக்கி நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனசுக்கு சந்தோஷமாக இருக்கு. இது உங்களுக்காக பண்ணிய படம். படத்தைப் பார்த்த எல்லாருக்கும் நன்றி, பார்க்காதவங்க நிச்சயம் பார்ப்பீங்கனு நம்புகிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
