குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடி...
நல்லங்கியூா் முத்துமாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கிய பக்தா்கள்
கோனேரிப்பட்டியை அடுத்த நல்லங்கியூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் விழா மாா்ச் 21 ஆம் தேதி பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக குண்டம் இறங்கும் பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோயில் வளாகத்தில் உள்ள குண்டத்தில் இறங்கி தங்கள் நோ்த்தி கடனைச் செலுத்தினா்.
மாலையில் கோயில் வளாகத்தில் பக்தா்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கோழி, ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டனா். அதைத்தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழாவெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.