புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை: கால அவகாசம் நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இலவச பேருந்து பயண அட்டை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண அட்டை வழங்கி வருகிறது. இந்த பயண அட்டையின் செல்லத்தக்க காலம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அட்டையை அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பேருந்து பயண அட்டையின் பயன்பாடு ஏப்.1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்துள்ளாா்.