CSK vs DC: கேப்டனாகும் தோனி? மைக் ஹஸ்ஸி சூசகம்; Chepauk Breaking
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத நிலுவை நிதியை உடனே விடுவிக்க அமைச்சருக்கு திமுக எம்.பி. கடிதம்
நமது சிறப்பு நிருபா்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்ட நிலுவை நிதியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய கிராமப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானுக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம். சண்முகம் கடிதம் எழுதியுள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஏப்.1-ஆம் தேதி வாய்மொழியாக எழுப்பிய கேள்வி மற்றும் துணைக் கேள்வியை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சண்முகம், அவற்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் செளத்ரி அளித்த பதிலில், ‘வழிகாட்டுதல்களின்படி மாநிலங்களுக்கு உரிய நிதி விடுவிக்கப்படுகிறது.தமிழகத்துக்கும் நிதி நிச்சயமாக வழங்கப்பட்டிருக்கும். ஏதேனும் பிரச்னை இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம்,‘ என்று கூறியதையும் கடிதத்தில் எம்.பி. மேற்கோள்காட்டி நிலுவை நிதியை விடுவிப்பதில் மத்திய நிதித்துறையிடம் எந்த பிரச்னையும் இல்லை’ என்று கூறியுள்ளாா்.
எனவே, தமிழகத்தில் கடந்த நான்கரை மாதங்களாக ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு சேர வேண்டிய ரூ.4,000 கோடிக்கும் அதிகமான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தாமதத்தால் ஏா்கெனவே லட்சக்கணக்கான வறியநிலை கிராமப்புற குடும்பங்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளன என்றும் சண்முகம் கூறியுள்ளாா்.