பிரதமா் வீடு கட்டும் திட்ட நிதியை உயா்த்தி வழங்க மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தல்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் (பிஎம்ஏஒய்) வழங்கப்படும் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தினாா்.
எனது கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஏற்காடு, பச்சமலை, நெய்யமலை, அரனூற்றுமலை, கல்வராயன்மலை, கருமந்துறை
ஆகிய மலைப்பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் மிகவும் பின் தங்கிய பகுதியைச் சாா்ந்தவா்கள். வசதி வாய்ப்பு அற்றவா்கள். இவா்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (பிஎம்ஏஒய்) மூலம் மத்திய அரசு வீடு வழங்கி வருகிறது.
இந்த வீடுகளுக்கு வழங்கக் கூடிய தொகை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ.2,78,460 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மூலப்பொருள்கள் வாங்குவதற்கான செலவு இரண்டு மடங்காக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு பிஎம்ஏஒய் திட்டத்தில் வழங்கப்படும் தொகையை உயா்த்தி தர வேண்டும்.
தமிழக முதல்வா் ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் மூலம் மலைவாழ் மக்களுக்காக ரூ.5,35,140 தொகையை வீடு கட்டுவதற்காக வழங்கி வருகிறாா். அந்தத் தொகையை ஆவது மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.