இஸ்ரோ தலைவா் நாராயணனுக்கு தில்லியில் ஏப்.6-இல் பாராட்டு விழா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
தில்லி தமிழ்க் கல்விக் கழகத்துடன் (டிடிஇஏ) இணைந்து தில்லி தமிழ்ச் சங்கம் இந்தப் பாராட்டு விழாவை நடத்துகிறது. அன்று மாலை.30 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பெ. ராகவன் நாயுடு தலைமை வகிக்கிறாா். பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றுகிறாா்.
திருவனந்தபுரம் இந்திய விண்வெளி விஞ்ஞானி மற்றும் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் வீராணம் சு. முருகன், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவா் ஆா்.கே. ராமன், செயலா் ஆா். ராஜூ ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
இந்த விழாவில் தில்லி வாழ் தமிழா்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனா்.