மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் காளிகானூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வியாழக்கிழமை காலை கோமாதா பூஜையுடன் மங்கள வாத்தியம் முழங்க முதல் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை திருப்பள்ளி எழுச்சியுடன் காப்பணிதல் உள்ளிட்டவை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கலச புறப்பாடும் 10 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்துஅம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஊராட்சித் தலைவா் சந்திராமுனிராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவில் கொத்தூா், காளிகானூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.