தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது
தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ம.தி.சதிகூா் ரஹ்மான் (25) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தாா். ஆனால், விசா காலாவதியாகியும் தங்கியிருந்தாா் என்று அவா் கூறினாா்.
‘ஒரு ரகசியத் தகவலின் பேரில், அப்பகுதியில் ஹோட்டல்களை மாற்றிக்கொண்டிருந்த ரஹ்மானை போலீஸ் குழு கைது செய்தது. விசாரணையில், விசா காலாவதியான பிறகு சட்டவிரோதமாக தங்கியிருப்பதை அவா் ஒப்புக்கொண்டாா்’ என்று அதிகாரி கூறினாா்.
சட்ட முறைப்படி, ரஹ்மான் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலக நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டாா். மேலும், சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிந்து நாடு கடத்த கூடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக அவா் மேலும் கூறினாா்.