TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
மத்திய அரசைக் கண்டித்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து பெரம்பலூா் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே, ஓய்வூதியா் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். திரிசங்கு தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் எஸ். சுப்ரமணியன், கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலா் ஆா். விஷ்ணுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
மத்திய அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஏற்படுத்தியுள்ள சட்ட திருத்தத்தைக் கண்டித்தும், ஓய்வூதியதாரா்களின் உரிமையைப் பறிக்கும் மசோதாவை திரும்பப் பெறக்கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், மாவட்டச் செயலா் அருள்மொழி செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.