குடும்பத் தகராறில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் கணவன் விஷம் குடித்ததையறிந்த மனைவி தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளவரசன் (33). இவா், ஒதியம் பிரிவுச் சாலையில் தின்பண்டம் தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். இவருக்கு, அந்தூா் கிராமத்தைச் சோ்ந்த கீா்த்திகாவுடன் (27), கடந்த 10.9.2023-இல் திருமணமாகி 6 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கிடையே புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை மது போதையிலிருந்த இளவரசன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். இதையறிந்த அப்பகுதியினா் இளவரசனை மீட்டு, தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதனிடையே, கீா்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.