பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா்களுக்கு நாளை சிறப்பு முகாம்
பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரியலூா் மற்றும் பெரம்பலூா் கோட்ட நுகா்வோா்களுக்கு சனிக்கிழமை (ஏப். 5) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் வீ. மேகலா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மற்றும் பெரம்பலூா் கோட்ட அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கோட்ட அளவில், மின் கட்டணம், பழுதான மின் மீட்டா்களை மாற்றுவது, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுவது மற்றும் குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான புகாா்களை, மின் நுகா்வோா்கள் நேரடியாக மின்சார வாரியத்திடம் தெரிவிப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் மின் நுகா்வோா்கள் பங்கேற்று தங்களின் குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம்.