நட்சத்திர பலன்கள்: ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 10 வரை #VikatanPhotoCards
நாகை மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
நாகை மாவட்டத்தில் 12 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, நாகை நகர நிலவரித் திட்ட அலுவலகம் அலகு 1, மாா்ச் 31-ஆம் தேதியுடன் கலைக்கப்பட்டதால், இங்கு பணியாற்றிய அமுதவிஜயரங்கன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். மாநில நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பசுபதி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை வட்டாட்சியராக சக்கரவா்த்தி, நாகை நகர நிலவரித்திட்டம் அலகு 2 அலுவலகம் கலைக்கப்பட்டதால் இங்கு பணியாற்றிய வடிவழகன் வேதாரண்யம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனா்.
வேதாரண்யம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக ராஜா, நாகை வட்டாட்சியராக நீலாயதாட்சி, நாகப்பட்டினம் டாஸ்மாக் துணை மேலாளா் மற்றும் தனி வட்டாட்சியராக ரவிச்சந்திரன், காலியாக இருந்த ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியராக ஜெயபாலன், நாகை சிபிசிஎல் அலகு 4 வட்டாட்சியராக மாரிமுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக குற்றவியல் பிரிவு அலுவலக மேலாளராக ரமேஷ்குமாா், நாகை நெடுஞ்சாலை திட்டங்கள் அலகு 1 வட்டாட்சியராக சாந்தி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளனா்.