`தன் கண்ணை தானே குத்திக்கொள்கிறார் ட்ரம்ப்!' - அமெரிக்காவில் பரஸ்பர வரியின் விளை...
Kamindu Mendis : வலதுகை, இடதுகை இரண்டிலும் பந்துவீச்சு - கலக்கிய கமிந்து மெண்டீஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன்கார்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 200 ரன்களை எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் கமிந்து மெண்டீஸ் வலது கை பேட்டர்களுக்கு இடது கையிலும் இடது கை பேட்டர்களுக்கு வலது கையிலும் என கையை மாற்றி மாற்றி வீசி கவனம் ஈர்த்திருந்தார்.

'Ambidextrous பௌலிங் முறை!'_
இப்படி இரண்டு கையிலும் பந்து வீசுபவர்களை Ambidextrous பௌலர்கள் என்பார்கள். கமிந்து மெண்டீஸ் இலங்கை அணிக்கு அறிமுகமானதில் இருந்தே இப்படி இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் இப்படி வீசுவது அனுமதிக்கப்பட்ட விஷயம்தான். ஆனால், கையை மாற்றி வீச நினைத்தால் ஒவ்வொரு முறையும் அதை நடுவரிடம் சொல்லிவிட்டே செய்ய வேண்டும்.
நடுவர் பௌலர் எந்த கையில் வீசப்போகிறார் என்பதை பேட்டரிடம் தெரியப்படுத்திவிடுவார்.

'முதல் வீரர்!'
13 வது ஓவரில் இடது கையில் ஸ்பின் வீசி ரகுவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்தியவர், அடுத்தடுத்த பந்துகளில் ரிங்கு சிங்குக்கும் வெங்கடேஷ் ஐயருக்கும் வலதுகையில் ஸ்பின் வீசினார். ஐ.பி.எல் வரலாற்றில் விக்கெட் எடுத்த முதல் ambidextrous பௌலர் கமிந்து மெண்டீஸ்தான்.