கரூரில் குரூப்-1 தோ்வுக்கு இலவச பயிற்சி
கரூரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் 70 காலிப்பணிக் காலியிடங்களுக்கான குரூப் -1 தோ்வு ஜூன் 15-உம்தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும்மையத்தில் ஏப். 1-ஆம்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தோ்வினை சிறந்த முறையில் எழுதி வெற்றிபெற வழிவகுக்கும் வகையில், மாதிரிதோ்வுகள் ஒவ்வொரு புதன்கிழமையும், வாரத்தோ்வுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞா்கள் உடனடியாக கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.