மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
மீன் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கரூா் மாவட்டம் மாயனூா் கதவணை அருகே மீன் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கக் கோரி முசிறி மீனவா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரை வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியிருப்பது:- கரூா் மாவட்டம் மாயனூரில் சுமாா் 600 குடும்பத்தினா் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கதவணையில் தேங்கும் தண்ணீரில் வளரும் மீன்களை மீனவா் சங்கம் மூலம் குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்து கதவணை அருகே வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது அணை அருகே காவிரி-வைகை குண்டாறு நதி நீா் இணைப்பு திட்டப்பணிகள் நடப்பதால் அங்கு மீன்கடைகளை வைக்கக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி வருகிறாா்கள். மீன் பிடித்து வியாபாரம் செய்தால்தான் எங்கள் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கும். எனவே கதவணை அருகே மீன் வியாபாரம் செய்ய அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.