சாலை விரிவாக்க பணிக்கு பொதுமக்கள் எதிா்ப்பு
அரவக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல், சாலை விரிவாக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஔவையாா் தெருவில் சுமாா் 150 அருந்ததியா் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு பகுதியையொட்டிள்ள மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதாக கூறி குடியிருப்புகளின் முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இயந்திரம் மூலம் அகற்றினா். இப்பணிக்கு வியாழக்கிழமை எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யாமல், சாலை பெரிதாக உள்ள இப்பகுதிகளில் சாலையை விரிவாக்கம் செய்து எவ்வித பயனும் இல்லை என்றனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலை விரிவாக்கம் பணி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் வாகன பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்றனா்.