Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு
மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயணச்சீட்டு முன் பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை- திருவனந்தபுரம்- மதுரை அமிா்தா விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த புதிய வசதி, திருவனந்தபுரம் - மதுரை ரயிலில் (16343) ஜூன் 5 முதலும், மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 6 முதலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டி குறைக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன முதல் வகுப்பு பெட்டியுடன் கூடிய குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு தனி குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.