செய்திகள் :

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

post image

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக 'கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை' என்ற சிறப்புக் கருத்தரங்கம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக அமைச்சர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும்போது, "இந்த மாநாட்டில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியமானது, அது குறித்து பேசுவதும் முக்கியமானது.

2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட சர்க்காரியா குழுவின் அறிக்கையில் பல நல்ல முன்மொழிவுகள் இருந்தும் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கூட்டாட்சி தத்துவம், நிதி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு ஆகும். மாநில அரசு, மத்திய அரசின் விளம்பரதாரர்கள்போல செயல்பட இயலாது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நம்முடைய குரலை உயர்த்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரை மாநிலங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு பொது விதிகளை உருவாக்கினாலும் அதனை சுமப்பது மாநில அரசுகள்தான். மத்திய அரசு தொடர்ச்சியாக மிகவும் வசதியானவர்களுக்கான சலுகைகளை வழங்கி வருகிறது.

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமே இல்லாமல் மத்திய அரசு கிடப்பில் போடுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை. மாநில அரசின் பெரும்பாலான விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது

உயர் கல்வி, மாநில அரசுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. சங் பரிவார அமைப்புகள் உயர் கல்வி நிலையங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்குகின்றன.

உயர் கல்வி அமைப்புகளுக்கு முறையான நிதி வழங்கப்படுவதில்லை, மாநில பல்கலைக்கழகங்களில் மாநில அரசோடு விவாதிக்காமல் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறாமல் செய்யப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரிய அளவுக்கு தென் மாநிலங்களின் பிரதிநிதத்துவம் குறையும். தொகுதிகளை குறைக்கும் முயற்சியால் உரிமைகளை, தேவைகளை பெறுவதில் சிக்கல் எழும் நிலை உருவாகும்.

கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் பொதுமக்களுக்கான புரிதலை அதிகப்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.

மணிப்பூர்: 'பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?' - மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்

2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது... அத்தனை கலவரங்களும... மேலும் பார்க்க

'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்த கடுமையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக எம்... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய பாலிடிக்ஸ்

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். முன்னதாக, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு நான்கு இடங்கள் கிடை... மேலும் பார்க்க

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!* ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத்* வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!* "எப்படியாவது இந்துக்கள் - ... மேலும் பார்க்க