செய்திகள் :

Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்யூட் வீடியோ

post image

நடிகர் அஜித் சென்னை ரேஸ் ட்ராக்கில் குடும்பத்துடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MIKA Go Kart Circuit என அழைக்கப்படும் மெட்ராஸ் சர்வதேச கார்டிங் அரங்கத்தில் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன் இருக்கும் புகைப்படங்களை அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

Ajith Kumar

இந்த பதிவில் அஜித்தை விட அதிக கவனம் பெற்றுள்ளார் ஆத்விக். இதுவரை ஃபுட்பால் பிளேயராக அறியப்பட்ட 9 வயது ஆத்விக், ரேஸ் காரில் அமர்ந்திருக்கும் வீடியோவை அஜித்குமார் ரேஸிங் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆத்விக்குக்கு அஜித் கார் ரேஸ் பற்றி அறிவுரை கூறும் தந்தை-மகன் மொமென்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷாலினியுடன் ஆத்விக்

சமீப காலங்களில் சினிமாவுக்கு இணையாக கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். Ajith Kumar Racing குழுவுடன் அவர் பங்கேற்ற துபாய் 24 மணிநேரப் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த ஆண்டு கார் ரேஸ் சீசன் முழுவதுமே களத்தில் இருக்கப்போவதாகவும் பேசியுள்ளார். இந்த ஆண்டு ஏற்கெனவே அவரது விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.

அடுத்ததாக வரும் 10ம் தேதி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இப்போது தந்தையும் மகனும் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டை அருகில் உள்ள ரேஸ் ட்ராக்கில் பயிற்சியில் ஈடுபடுவதும் ஷாலினி அதை ஊக்குவிப்பதும் வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார்கள்.

`13 வயசுல வந்தவர்' - மறைந்த `இளமை எனும் பூங்காற்றே' ரவிக்குமார்; திரையுலகத்தினர் அஞ்சலி

கேரளாவின்திருச்சூர் மாவட்டத்தில் பிறந்த ரவிகுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். தமிழில்இவரது முதல் படம் 'அவர்கள்', இந்த படத்தில்ரஜினி, கமல் இருவருக்கும் இணையாக அதாவது மூன்ற... மேலும் பார்க்க

வீர தீர சூரன்: "க்ளைமேக்ஸில் மதுர வீரன் தானே பாடலைச் சேர்த்ததுக்கான காரணம்...'' - இயக்குநர் அருண்

வீர தீர சூரன்விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது `வீர தீர சூரன்'. இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும... மேலும் பார்க்க

தனுஷ் விவகாரம் : `உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள்' - ஆர்.கே.செல்வமணி ஆவேசம்

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் அட்வான்ஸ் பெற்றுவிட்டு கால்ஷிட் கொடுக்காத விவகாரம் முன்பு சர்ச்சையாக எழுந்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ஃபெஃப்ச... மேலும் பார்க்க

'திரு. ஜோசப் விஜய் அவர்களே இது தவறு... நீங்கள் சினிமா வாரிசு' - விஜய்யை சாடிய போஸ் வெங்கட்

திமுக கூட்டத்தில் விஜய்யை போஸ் வெங்கட் விமர்சித்துப் பேசியிருக்கிறார். திமுக கூட்டத்தில் பேசிய போஸ் வெங்கட், " ஸ்டாலின் கடின உழைப்பாளி. 14 வயதில் இருந்து உழைக்கிறார். கோபாலபுரத்தில் திமுக இளைஞரணி என்ற... மேலும் பார்க்க

``என்னைக் காப்பாற்றிய அந்த 2 படங்கள்..'' - கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சசிகுமார் ஓப்பன் டாக்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சசிகுமார், "ராஜுமுருகன் படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு எழுத்துகளும், வார... மேலும் பார்க்க

Redin Kingsley: ``இளவரசி பிறந்திருக்கிறாள்'' - மகிழ்ச்சியில் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா தம்பதி

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சீரியல் நடிகை சங்கீதாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடனத்தின் பக்கம் இருந்த ரெடின் கிங்ஸ்லியை இயக்குநர் நெல்சன் சினிமா பக்கம் அழைத்து வந்து `கோலமாவு கோகில... மேலும் பார்க்க