Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்...
'திரு. ஜோசப் விஜய் அவர்களே இது தவறு... நீங்கள் சினிமா வாரிசு' - விஜய்யை சாடிய போஸ் வெங்கட்
திமுக கூட்டத்தில் விஜய்யை போஸ் வெங்கட் விமர்சித்துப் பேசியிருக்கிறார். திமுக கூட்டத்தில் பேசிய போஸ் வெங்கட், " ஸ்டாலின் கடின உழைப்பாளி. 14 வயதில் இருந்து உழைக்கிறார். கோபாலபுரத்தில் திமுக இளைஞரணி என்ற அமைப்பைத் தொடங்கினார். பெரியாருடன் இணக்கமாக இருந்தார். எம்.ஜி.ஆர் உடன் இணக்கமாக இருந்தார். அண்ணாவைத் தெரிந்து வைத்திருந்தார்.
14, 16, 17 வயதில் உழைத்தவரைப் பார்த்து தற்போது நான் உனக்கு போட்டி என்கிறாரே அவர் யார்? 14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். அந்த வயதில் உங்கள் தந்தையின் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள். 16 வயதில் எப்படி கதாநாயகனாக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.

20 வயதில் நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஏன்னென்றால் நானும் அந்தத் துறையில் இருந்துதான் வந்திருக்கிறேன்.
தற்போது 50 வயதில் வந்து திமுகதான் எனக்கு போட்டி என்று சொல்கிறீர்கள். அது எந்தவகையில் அர்த்தம் உள்ள வார்த்தை. 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று சொன்னபோது ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. காரணம் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினார்கள்.
திரு.ஜோசப் விஜய் அவர்களே இது தவறு. 20 வயதில் இருந்து 50 வயது வரை நீங்கள் செய்துக்கொண்டிருந்த வேலை என்ன? நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தீர்கள். வாரிசு அரசியல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் யாருடைய வாரிசு? உங்கள் தாத்தா சினிமா காரர், அப்பா சினிமாகாரர், அம்மா சினிமாகாரர், மாமா சினிமாகாரர் அப்போது நீங்கள் சினிமா வாரிசு.

உங்கள் 14 வயதில் உங்கள் அப்பா திரைகதை, வசனம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின் 14 வயதில் தன் தாத்தா இந்திரா காந்தியுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்" என்று போஸ் வெங்கட் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...