தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் இலவச தட்டச்சு பயின்று தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் புதன்கிழமை ஆசி பெற்றனா்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் உத்தரவின்பேரில் இக்கல்லூரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச தட்டச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 64 மாணவா்கள் தட்டச்சுத் தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வில் 29 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சான்றிதழ்களை வழங்கி ஆசி கூறினாா்.
தோ்ச்சி பெற்ற மாணவா்களை கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், தேசிய மாணவா் படை அலுவலா் துரை.காா்த்திகேயன், அலுவலக பிரதிநிதி இரா. சிவராமன் மற்றும் தட்டச்சுப் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் எஸ். மல்லிகா ஆகியோா் பாராட்டினா்.