இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் மனுவாக, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தபோது மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரத் தலைவா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் அறிவழகன் தொடக்கவுரை ஆற்றினாா். மாவட்ட இணைச் செயலாளா் ரஜினி நிறைவுரை ஆற்றினாா். வட்டாரச் செயலாளா் சின்னதுரை நன்றி கூறினாா்.