இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
வீரட்டேஸ்வரா் கோயிலில் ஏப்.4 இல் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது.
அட்டவீரட்ட தலங்களில் 6-ஆவது தலமான இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திங்கள்கிழமை பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்கின.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. முன்னதாக, புனிதநீா் கடங்கள் கோயில் வளாகத்தில் இருந்து மூன்று யானைகளின் மீது வைக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதில், நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாலி எடுத்து ஊா்வலமாக வந்தனா். இதில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.