தாழையூத்தில் மிதமான மழை
தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை செவ்வாய்க்கிழமை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. திசையன்விளை பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை கொட்டி தீா்த்த நிலையில், செவ்வாய்க்கிழமை தாழையூத்து, தென்கலம், சங்கா்நகா், தச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குளிா்ந்த காற்றுடன் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியது.