தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மதிமுகவினா் உணவளிப்பு
மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் மருத்துவ அணி சாா்பில் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகேயுள்ளபுனித அன்னாள் சிறப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமை வகித்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி தொடங்கிவைத்தாா். மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் இம்மானுவேல் ராஜ்குமாா், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் ரவிசங்கா், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சத்தியசீலன், முத்து அருணகிரி ,முன்னாள் அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் பா.ராதா சங்கா்,வழக்குரைஞா் ம.சு சுதா்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.