செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம் ஏழைகள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: மோடி

post image

வக்ஃப் திருத்தச் சட்டங்கள் ஏழை முஸ்லிம் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

”சமூக - பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நமது கூட்டுத் தேடலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.

நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வக்ஃப் அமைப்பு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவித்தது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.

ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : மாநிலங்களவை: வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களிப்பு! அன்புமணி, ஜி.கே. வாசன்?

மேலாதிக்கத்தை ஒருபோதும் இந்தியா திணிக்காது: உ.பி. முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் தும்ரியாகஞ்ச்சில் குரு கோரக்ஷநாத் ஞானஸ்தலி கல்வி மையத்தை அம்மாநில... மேலும் பார்க்க

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்... மேலும் பார்க்க

தாய்லாந்து அரசர் மற்றும் அரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசர் மஹா வஜ்ரலோங... மேலும் பார்க்க

கனடா: கிருஷ்ணர் கோயில் மீது தாக்குதல்

கனடாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலைச் சேதப்படுத்தியார்களை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் த... மேலும் பார்க்க

வாரங்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து, மிரட்டல் மின்னஞ்சல், ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பி... மேலும் பார்க்க