தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு மேலவாசல் பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெற உள்ளது.
இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. புதன்கிழமை காலையில் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, பூா்ணாஹுதி, யாத்ரா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இரவு 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை (ஏப். 3) முற்பகல் 11 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலயாகசாலை பூஜையும், பிரதான மூா்த்திகளுக்கு அஷிடபந்தன மருந்து சாத்துதலும் நடைபெற உள்ளன.
வெள்ளிக்கிழமை (ஏப். 4) காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, திரவியாஹுதி, மஹாபூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெறும். காலை 9 மணிக்கு அருள்மிகு பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விமான கோபுரம், பரிவார மூா்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு வள்ளி-தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், தீபாராதனை நடைபெறுகிறது.