WAQF Bill: கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன?
'இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா', 'இந்த மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது' - இப்படி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தும் நேற்று முன்தினம் மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து எதிர்க்கட்சிகள் விவாதித்தனர். இந்த காரசார விவாதம் கிட்டதட்ட 12 மணிநேரத்திற்கு தொடர்ந்தது.
ஆனால், இறுதியில், மக்களவையில் 288 - 232 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நேற்று வக்ஃபு வாரிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அங்கேயும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விவாதம் கிட்டதட்ட 13 மணிநேரம் தொடர்ந்திருக்கிறது.
பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 128 - 95 வாக்கு வித்தியாசத்தில் மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அடுத்து என்ன?
மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா அடுத்ததாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
அவருடைய ஒப்புதலுக்கு பிறகு, இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும்.
முஸ்லீம்கள் எதிர்ப்பு
இந்த மசோதாவிற்கு, 'இது முஸ்லீம்களுக்கு எதிரான துரோகம்' எனக் குறிப்பிட்டு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
