செய்திகள் :

US Tax Hike: நடுக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தை; `இப்படித்தான் நடக்கும்' - ட்ரம்ப் சொன்ன பதில்!

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்புகள் வால் ஸ்ட்ரீட்டை உலுக்கியுள்ளது. கோவிட் தொற்று பரவலுக்கு பிறகு உலக நிதி சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சியாகக் கருதுகின்றனர்.

இந்த வரிவிதிப்புகள் அவரது சொந்த நாட்டுடன் கண்டங்கள் கடந்து பல நாடுகளின் பொருளாதாரத்தில் சேதம் விளைவிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வீழ்ந்த பங்கு சந்தை குறியீடுகள்

ட்ரம்ப்பின் கட்டண தொகுப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, அமெரிக்காவின் முக்கிய வர்த்தக குறியீடான S&P 500 இண்டெக்ஸ் 4.8% சரிந்துள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய சந்தைகளைவிட அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

கோவிட் தொற்று பரவலால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதற்கு பிறகு மிக மோசமான நாள் என்கின்றனர்.

மற்றொரு பங்குச் சந்தை குரியீடான டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு சராசரி 1,679 புள்ளிகள் அல்லது 4% சரிந்தது. நாஸ்டாக் காம்போசைட் குறியீடு 6% சரிந்துள்ளது.

அதிக வரியால் பொருளாதார வளர்ச்சி பலவீனமடையும், கட்டணங்களால் பண வீக்கம் ஏற்படும் என்ற அச்சத்தால் நிதி சந்தை பாதிப்பை சந்தித்துள்ளது. எஸ்&பி, டவ் ஜோன்ஸ் குறியீடுகளின் மூத்த குறியீட்டு ஆய்வாளர் ஹோவர்ட் சில்வர்ப்ளாட், 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு சேதமடைந்ததாகக் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் முதல் பெரிய தொழிநுட்ப நிறுவனங்களின் பங்குகள் வரை, மற்ற நாணயங்களுக்கு எதிரான அமெரிக்காவின் மதிப்பு வரை அனைத்தும் சரிந்தது. சமீப காலங்களின் முதலீட்டாளர்கள் பாதுகாப்பானதாக கருதி வந்த தங்கமும் சரிந்துள்ளது.

Trump

இதனால் மிகப் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது அமெரிக்காவின் சிறு நிறுவனங்கள்தான். சிறிய பங்குகளுக்கான ரஸ்ஸல் 2000 குறியீடு 6.6% வீழ்ந்துள்ளது.

ட்ரம்ப் உலகம் முழுவதுக்கும் புதிய கட்டணங்களை விதிக்கப்போகிறார் என்பதை முதலீட்டாளர்கள் முன்னரே அறிந்திருந்தனர். இதன் காரணமாக எழுந்த அச்சமே வால் ஸ்ட்ரீட்டின் ஆரோக்கியத்தை அளவிடும் முக்கிய குறியீடான எஸ்&பி 500 -ஐ அதன் அதிகபட்ச மதிப்பில் இருந்து 10% குறைத்தது. இதையும் தாண்டி முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் கட்டணங்களை அறிவித்துள்ளார் ட்ரம்ப்.

கூலாக பதில் சொன்ன ட்ரம்ப்

உலக நாடுகளுக்கு கட்டணங்களை அறிவித்துவிட்டு நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் இருந்து ஃபுளோரிடா கோல்ஃப் கிளப்பிற்கு சென்ற ட்ரம்ப்பிடம் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "இது மிகவும் நன்றாக நடக்கிறது என நான் நினைக்கிறேன்" என பதிலளித்தார்.

"நாங்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்கிறோம், ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதுபோல, இது மிகப் பெரிய விஷயம். இப்படித்தான் நடக்கும்" எனக் கூறியுள்ளார்.

`இப்படித்தான் நடக்கும்' - ட்ரம்ப்

இப்போது பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களும் வீடுகளும் எளிதாக கடன் வாங்கி செலவு செய்ய முடியும். இதுதான் இப்போதிருக்கும் ஒரே சாத்தியமான வழி என்கின்றனர்.

அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்ற அச்சமும், வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பும் அமெரிக்க சந்தைகளை நடுக்கத்தில் வைத்திருக்கின்றன.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

WAQF Bill: ``இஸ்லாமியர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம்..'' - ஆர்பாட்டம் அறிவித்த திருமாவளவன்!

நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்டுள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் குரல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "சட்டத்தின் பெயரால் இஸ்ல... மேலும் பார்க்க

``பிரபல யூடியூபருக்கு இந்த நிலைமைனா, சட்ட ஒழுங்கு மிக கேவலமாக..'' - திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் பட்டப் பகலில் அத்தும... மேலும் பார்க்க

WAQF Bill: ``இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்'' - தவெக ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோ... மேலும் பார்க்க

WAQF Bill: ``நம்பிக்கை உடைந்துவிட்டது'' - நிதிஷ் கட்சியில் இருந்து விலகிய 2 மூத்த நிர்வாகிகள்!

வக்ஃப் சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இரண்டு மூத்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செயல்படும் ஐக்கி... மேலும் பார்க்க

WAQF Bill: கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன?

'இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா', 'இந்த மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது' - இப்படி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தும் நேற்று முன்தினம் மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மச... மேலும் பார்க்க