டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
WAQF Bill: ``இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்'' - தவெக ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பனையூர் ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆனந்த், "இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் வக்ஃப் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் இது சம்பந்தமாக நேற்று விபரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இஸ்லாமியர்களுக்கு தவெக கட்சியும், எங்கள் தலைவர் அவர்களும் உறுதுணையாக இருப்போம். இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இந்த சட்டத்தில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இஸ்லாமியர்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஆகவே நாங்களும் மற்றவர்களைப் போல வந்தோம், போனோம் என்று இருக்க மாட்டோம்.

அவர்களுக்கு நாங்கள் உறுத்துணையாக இருப்போம். மக்களின் விருப்பத்தை செயல்படுத்தும் வகையில்தான் அரசு இருக்க வேண்டும்.
இஸ்லாமியர்களைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவர்கள் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக தலைவரின் வழிகாட்டுதலின் படி ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடைபெறும். தலைவரின் அறுவுறுத்தலின் படி இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs