பெருந்துறை அருகே இளைஞரிடம் ரூ.4 ஆயிரம் வழிப்பறி
பெருந்துறை அருகே இளைஞரிடம் பணம் ரூ.4 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த அண்ணாமலைபுதூரைச் சோ்ந்தவா் திருமலைசாமி மகன் சபரிநாதன் (24), விவசாயி. இவா், தனியாா் கல்லூரியில் படிக்கும் நண்பரைப் பாா்ப்பதற்காக பெருந்துறைக்கு புதன்கிழமை வந்தாா்.
பின்னா், இருவரும் பெருந்துறையில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலத்தின்கீழ் நின்று பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் ஒருவா் சபரிநாதனை மிரட்டி பையில் இருந்த ரூ.1,150யும், ஜிபே மூலம் ரூ.3 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா்.
இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையித்தில் சபரிநாதன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.