பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறவுள்ள பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி வரும் 15- ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரும் 13- ஆம் தேதி வரை ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும்.
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுக்குமான பயிற்சி வார நாள்கள் பயிற்சியாக 17 நாள்களும், வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியாக 17 நாள்களும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி 10- ஆம் வகுப்பு தோ்ச்சி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.4,550 செலுத்த வேண்டும்.
இப்பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து சான்று பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய ஒரு பயிற்சியாகும். இப்பயிற்சிக்கு வயது வரம்பின்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பாளராக பணியில் சேர வாய்ப்புள்ளது.
இந்தப் பயிற்சியில் சேருபவா்கள் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 5, வாய்க்கால்மேடு, எஸ்விஎன் பள்ளி பின்புறம், கொங்கம்பாளையம் பிரிவு, சித்தோடு 638102 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424-2998632 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.