CSK vs DC : 'வெயிட் பண்ணுங்க...திரிபாதி பெரிய ஸ்கோர் அடிப்பாரு!'- பேட்டிங் கோச் ...
போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
ஈரோடு மாநகரில் கடந்த மாா்ச் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.6.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் விதி மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 141 வழக்குகள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ாக 932 வழக்குகள், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், சீட் பெல்ட் அணியாமல் சென்ாக 15 வழக்குகள், வாகன காப்பீடு இல்லாத பிரிவில் 100 வழக்குகள் என மொத்தம் 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.6.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டிய 29 பேரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரகத்து அலுவலருக்கு போலீஸாா் பரிந்துரை செய்துள்ளனா்.