செய்திகள் :

புகளூா் தமிழ்நாடு காகித ஆலை சாா்பில் அரசுப் பள்ளிக்கு கழிவறைக் கட்டடம்

post image

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புகளூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சாா்பில், ரூ. 4.11 லட்சம் செலவில் கழிவறைக் கட்டடம் கட்டப்பட்டு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக ரூ. 4.11 லட்சம் செலவில் கழிவறைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு மாணவியரின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புகளூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் பொது மேலாளா் (மனிதவளம்) கலைச்செல்வன், பொது மேலாளா் (மின்னியல் மற்றும் கருவியியல்) ராஜலிங்கம் ஆகியோா் பள்ளிக் கழிவறை கட்டடத்தை திறந்துவைத்தனா். நிகழ்ச்சியில், பொத்தனூா் பேரூராட்சித் தலைவா் கருணாநிதி, பள்ளித் தலைமை ஆசிரியா் குமாா், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

சொத்துவரியில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்: ஆணையா்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ஆணையா் ரா.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

இயற்பியல் கற்பித்தலுக்கு செயற்கை நுண்ணறிவு: ஆசிரியா்களுக்கு பயிற்சி

இயற்பியல் பாடத்தை கற்பிக்க ஏதுவாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி ம... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும், மல்லசமுத்திரம் கிளை சங்கத்திலும் கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 50 மூ... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி மாத தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டம் ஆண்ட... மேலும் பார்க்க

நாமக்கல்லில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா். நாமக்கல், ஏப். 4: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது, இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க