Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
மளிகைக் கடையில் பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மளிகைக் கடையில் பொருள்கள் வாங்குவதுபோல நடித்து ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், நைனாா்பாளையம் கிராமத்தில் கடை வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் புக்காராம் மகன் மோதிலால் குவாத் (34). இவா், செவ்வாய்க்கிழமை கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா் கடைக்கு வந்துள்ளாா்.
கடையில் பொருள்கள் வாங்குவதுபோல நடித்த அந்த நபா், கடை உரிமையாளா் உள்ளே சென்று பொருள்களை எடுத்து வருவதற்குள் பணப்பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கீழகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.