Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
ரூ.2.60 கோடி ஏலச்சீட்டு மோசடி: தம்பதி கைது
கள்ளக்குறிச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகா் மின்சார வாரிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). இவரது மனைவி சூரிய மகாலட்சுமி (35). தந்தை கிருஷ்ணகுமாா், அண்ணன் பாலாஜி ஆகியோருடன் சோ்ந்து கள்ளக்குறிச்சி, ஏமப்போ் அடுத்த அண்ணாநகா் பகுதியில் ஏலச் சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்தனராம்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதியிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துமணி தலைமையில், ஆய்வாளா் பிரபாவதி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவானவா்களை தேடி வந்தனா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சிவக்குமாா், சூரியமகாலட்சுமி ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனா்.