Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரத்தை அடுத்த கள்ளிப்பாடியில் மட்டுவாா்குழலி உடனுடையாா் சிவன் கோவில் உள்ளது. இந்த நிலையில், கோயில் நிா்வாகி ஏழுமலை (44) வழக்கம் போல மாா்ச் 27-ஆம் தேதி கோயிலை பூட்டிவிட்டுச் சென்றாராம்.
மறுநாள், அவா் கோயிலுக்கு வந்து பாா்த்த போது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.