மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்! கோவா அணி கேப்டனாகிறாரா?
Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்
மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச் சுருட்டியது. மும்பை அணியில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைதொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணி 13 ஓவர்களிலேயே 121 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை பவுலர் அஸ்வனி குமார் ஆட்டநாயகன் விருது வென்றார்.

விருது பெற்ற பின்னர் பேசிய அஸ்வனி குமார், ``இந்த வாய்ப்பு கிடைத்ததும், ஆட்டநாயகன் விருது வென்றதும் எனக்கு மிகப்பெரிய விஷயம். எனது சொந்த ஊர் மொஹாலி மாவட்டத்தில் இருக்கிறது. கடின உழைப்பாலும், கடவுளின் ஆசியினாலும் இந்த இடத்தில் நிற்கிறேன். நான் முழு உறுதியுடன் இருந்தாலும், போட்டிக்கு முன்னர் எனக்குப் பதட்டம் இருக்கும். எனக்கு என்ன வாய்ப்புகள் கிடைத்தாலும், அது என் மக்களைப் பெருமைப்படுத்தும்" என்றார்.