செலவு காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம்:
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ரிஷபம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர்களுடன் ஏதாவது பிரச்சினை இருந்தால் இப்போது சரியாகி விடும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
மிதுனம்:
கிரகநிலை:
ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று தொழில்துறையினர் அபிவிருத்திக்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நிலுவையிலுருந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும்..
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கடகம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடவுள் பக்தி அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் இடங்களில் சக பணியாளர்களால் தொந்தரவு இருந்து கொண்டு தான் இருக்கும். வீண் விவாதங்கள் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சிம்மம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். மூத்த பெண்மணிகளுக்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டோடும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை,வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கன்னி :
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் மேற்கல்வி படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் எதிர்பார்த்த சம்பளத்துடன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
துலாம்:
கிரகநிலை:
ராசியில் புதன்(வ) , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று வருமானம் நல்லபடியாக இருப்பதால் செலவுகளை சமாளிக்கலாம். சிலருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரலாம். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
அதிர்ஷ்டநிறம்:வெள்ளை,மஞ்சள்,பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. சிலருக்கு வெளிநாடு போகும் கனவு நிறைவேறும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்டநிறம்:வெள்ளை,இளஞ்சிவப்பு,நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தனுசு:
கிரகநிலை:
ராசியில் சந்திரன், குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று முன்பு எடுத்த முடிவுகள் தவறில்லை என்று அனைவராலும் புகழப் படுவீர்கள். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
மகரம்:
கிரகநிலை:
ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. பெண்கள் அலுவலகத்திற்கு சென்று வரும் போது கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கும்பம்:
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் மனம் ஏற்க்காது எளிமையான பாடங்களைக் கூட படிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
மீனம்:
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று தொழிலில் உற்சாகமாக அனைத்து விசயங்களும் நடந்தேறும். சிலர் உங்களுக்கு பகைமை காட்டினாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9