ஆா்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக சித்தாந்தப் போரைத் தொடங்க வேண்டும்: டி. ராஜா
ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குடும்பப் பிரச்னையில் தனக்கு தொடர்பில்லை என திவ்ய பாரதி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இணை, கடந்தாண்டு பிரிந்து வாழ்வதாகத் தெரிவித்ததுடன் விவாகரத்து முடிவையும் அறிவித்தனர்.
அதன்பின், இருவரும் ஒரே இசைக்கச்சேரியில் இணைந்து பாடியதால் மீண்டும் இவர்கள் சேர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கடந்த மாதம் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை அளித்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இந்த விவாகரத்துக்குக் காரணம் நடிகை திவ்ய பாரதிதான் என வதந்திகள் பரவி வந்தன. பேச்சுலர் படத்தில் ஜோடியாக நடித்த திவ்ய பாரதி, அப்படத்திற்குப் பின் ஜி.வி. பிரகாஷுடன் டேட்டிங் செய்து வருகிறார் எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து, கிங்ஸ்டன் படத்தின் நேர்காணலுக்காக திவ்ய பாரதியுடன் கலந்துகொண்ட ஜி.வி. பிரகாஷ் தனக்கும் திவ்யாவுக்கு தொழில்முறையான தொடர்பு மட்டுமே உள்ளது; மற்றபடி எந்த தனிப்பட்ட உறவும் இல்லை எனக் கூறியிருந்தார்.
ஆனால், ஜி.வி. பிரகாஷ் - திவ்ய பாரதி குறித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவியதால், ஆத்திரமடைந்த திவ்ய பாரதி இன்ஸ்டாவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்னையில் என் பெயரைத் தொடர்ந்து இழுப்பது எந்த விதத்திலும் சரியானது கிடையாது. எனக்கும் ஜி.வி. பிரகாஷின் குடும்ப விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஒருபோதும் நடிகரையோ திருமணமான ஆணையோ டேட்டிங் செய்ய மாட்டேன். ஆதாரமில்லாத வதந்திகளுக்காகக் கவலைப்படத் தேவையில்லை என இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால், அவை எல்லைகளை மீறியுள்ளதால் வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நான் வலிமையான, சுதந்திரமான பெண் என்பதால் வதந்திகள் என்னைச் சோர்வுறச் செய்யாது. எதிர்மறையான எண்ணங்களுக்கு பதிலாக சிறந்த உலகத்தை உருவாக்க முயற்சி செய்வோம். இந்த விஷயத்தில் இதுவே என் முதலும் இறுதியுமான விளக்கம். நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஃபாசில் ஜோசஃபின் மரண மாஸ் டிரைலர்!