மீண்டும் மீண்டுமா? பந்துவீச்சாளருக்கு பதிலாக நடிகரை திட்டித்தீர்க்கும் விராட் கோலி ரசிகர்கள்!
ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 7 ரன்களுக்கு அர்ஷத்கான் ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலி ரசிகர்கள் அவரை திட்டுவதற்கு பதிலாக பாலிவுட் நடிகர் அர்ஷத் சர்ஷியை திட்டி வருகிறார்கள்.

விராட் கோலி ரசிகர்கள் இந்தமாதிரி முட்டாள்தனமாக நடந்துகொள்வது இது முதல்முறை அல்ல.
கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் க்ளென் பிலிப்ஸ் கோலி விக்கெட்டை எடுத்ததுக்கு பிலிப்ஸ் எலெக்ட்ரானிக் நிறுவனத்தை திட்டி வந்ததும் கவனிக்கத்தக்கது.
கல்வி முக்கியமென கிரிக்கெட் ரசிகர்கள் கோலி ரசிகர்களை கிண்டலடித்து வருகிறார்கள்.