டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரியான் ரிக்கல்டான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.
இதையும் படிக்க: ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!
சூர்யகுமார் யாதவ் சாதனை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் இதுவரை அவர் 8,007* ரன்கள் குவித்துள்ளார்.
x 8️⃣0️⃣0️⃣0️⃣* ☀️#MumbaiIndians#PlayLikeMumbaipic.twitter.com/bzICDIPK6O
— Mumbai Indians (@mipaltan) April 2, 2025
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இந்திய வீரர்கள்
விராட் கோலி - 12,976 ரன்கள்
ரோஹித் சர்மா - 11, 851 ரன்கள்
ஷிகர் தவான் - 9,797 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 8,654 ரன்கள்
சூர்யகுமார் யாதவ் - 8,007 ரன்கள்