”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
ஶ்ரீவில்லிபுத்தூர்: நாய்கள் மூலம் மான் வேட்டையாடிய 4 பேர் கைது!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் மூலம் மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலத்திற்கு இரைதேடி வரும் மான்களை வேட்டை நாய்கள் மூலமாக வேட்டையாடி இறைச்சிக்காக கொல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த திருவண்ணாமலை மலையடிவார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரெங்கர்கோயில் பீட்டிற்குட்பட்ட விவசாய தோட்டத்தில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் இறைச்சிக்காக மானை வேட்டையாடி மாமிசத்தை ஒளித்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவைச் சேர்ந்த தங்கராஜ், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்பேரில் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சந்திரகுமார், நாகராஜ் ஆகிய மேலும் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மான் தலை மற்றும் மாமிசம், தோல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது" என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
